Home » » 3 இடியட்ஸ் படத்தில் ஜீவா

3 இடியட்ஸ் படத்தில் ஜீவா

3 இடியட்ஸ் படத்தில் ஜீவா நடிக்க இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்தியில் பெரும்வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. விஜய் நாயகனாக நடிப்பது உறுதியாகி விட்டது. ஷங்கர் இயக்குகிறார். எந்திரன் ரீலிசானதும் இப்படத்தின் வேலைகள் துவங்குகின்றன.



 3 இடியட்ஸ் படம் 3 ஹீரோக்களின் கதை. மற்ற இருநாயகர்களாக மாதவன், சிம்பு ஆகியோர் நடிப்பார்கள் என கூறப்பட்டது. ஆனால் அவர்கள் நடிக்க இயலாது என விலகி விட்டனர்.
இதையடுத்து பாய்ஸ் சித்தார்த் நடிப்பார் என கூறப்பட்டது. இதுபற்றி சித்தார்த்திடம் கேட்டபோது, நான் நடிக்கவில்லை என்று மறுத்தார். 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக்கில் நான் நடிக்க போவதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று கூறினார். இதையடுத்து அவரும் இந்தப் படத்தில் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. பாய்ஸ் சித்தார்த் நடிக்கவிருந்த கேரக்டரில் இனி ஜீவா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக ஜீவாவுடன் படக்குழுவினர் பேசி வருவதாகத் தெரியவந்துள்ளது.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan