3 இடியட்ஸில் சத்யராஜ்! ஷங்கரின் நேரடி அழைப்பு
எல்லா செட்டில்மென்ட்டும் முடிந்தது. ஷங்கரும் 'Full and Final settlement' என்று எழுதி கையெழுத்திட்டு விட்டாராம். எந்திரனுக்கும் அவருக்குமான அக்ரிமென்ட் சம்பிரதாயங்கள் முடிந்தபின்......
....சுதந்திரப் பறவையாகிவிட்ட அவரது அடுத்த வேலை, எந்திரனின் போஸ்ட் புரடக்ஷன் மட்டுமல்ல, த்ரி... இடியட்ஸ்சின் ஸ்டார் காஸ்ட்டிங் குறித்த நடைபயிற்சியும்தான்!
தனது உதவியாளர்கள் சிலரிடம் யார் யார் எந்தெந்த வேடங்களில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று லிஸ்ட் எடுக்க சொல்லியிருக்கிறாராம். ஒரு முக்கியமான கேரக்டரில் சத்யராஜ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஃபீல் பண்ணிய ஷங்கர் தானே நேரடியாக புரட்சித்தமிழனிடம் பேச, எதிர்முனை பதில் 'இப்பவே நான் ரெடிங்க' என்பதுதான்! (சிவாஜியில் வில்லனா நடிக்க கூப்பிட்டவர்தானே என்ற கோபமெல்லாம் போயிருச்சுங்களா புரட்சித்தமிழன்?)
சித்தார்த், மாதவன், சிம்பு போன்ற நடிகர்கள் கழன்று கொள்ள, ஆர்யாவின் பொசிஷன் எப்படி? அவர் த்ரி இடியட்சில் கமிட் ஆகிவிட்டார் என்று சிலரும், இல்லையில்லை. சம்பளமே கோடிகளில் கேட்கிறார். அதனால் அந்த எண்ணத்தை பொடிமாஸ் ஆக்கிவிட்டார்கள் என்று சிலரும் செய்திகளை கசிய விடுகிறார்கள். துவக்க விழா வரைக்கும் சொல்ல முடியாது போலிருக்கு!
0 comments:
Post a Comment