
சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்க இருந்தார் லிங்குசாமி. இந்தப் படத்தை தயாநிதி அழகிரி தயாரிப்பதாக இருந்தது. இப்போது அதில் மாற்றம் நடந்துள்ளது. இந்தப் படத்தில் விஜய் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வேலாயுதம் படம் நவம்பர் மாதத்தில் முடிவடைகிறது.
இந்தப் படத்திற்கு பிறகு லிங்குசாமியின் படத்தில் நடிக்க இருப்பதாகவும், இதில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாகவும் பேசிக்கொள்கின்றனர்.
வேலாயுதம் படத்தில் ஹன்சிகா மோத்வானி நடிக்கும் பாத்திரத்தில் முதலில் காஜல் அகர்வாலிடம் கேட்டதாகவும், அவரது கால்ஷீட் பிஸியாக இருந்ததால் அவர் நடிக்க முடியாமல் போனதாகவும், இப்போது லிங்குசாமி இயக்கும் இந்தப் படத்தில் காஜல் அகர்வாலுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற விஜய் கூறியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
அமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த குருவி படத்திற்கு கால்ஷீட் கொடுத்து நடித்த விஜய், அடுத்து அமைச்சர் அழகிரி மகன் தயாநிதி அழகிரி தயாரிக்கும் படத்தில் நடிக்கவும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.காஜல் அகர்வால் நடித்த நான் மகான் அல்ல இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment