இளைய தளபதி விஜய் தற்போது காவல் காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சித்திக் இயக்குகிறார். இவர் ஏற்கனவே விஜயை வைத்து ப்ரண்ட்ஸ் என்ற மெகா ஹிட் படத்தை இயக்கியிருக்கிறார். மளையாளத்தில் இவர் இயக்கிய பாடிகார்ட் என்ற படத்தைத்தான் தமிழில் காவல் காதல் என்ற பெயரில் இயக்குகிறார்.இந்த படத்திற்கு முதலில் பாடிகார்ட் என்பதன் தமிழாக்கமான காவல்காரன் என்ற தலைப்பையே வைத்திருந்தனர். காவல்காரன் படத்தின் தலைப்புக்கு சத்யா மூவீஸ் எதிர்ப்பு தெரிவித்ததால் காவல் காதல் என்று பெயர் மாற்றினர். ஆனால் இந்த தலைப்பில் படத்தின் நாயகன் விஜய்க்கு திருப்தியில்லையாம். எனவே இந்த தலைப்பும் விரைவில் மாறும் என்கின்றனர்.செப்டம்பர் மாதம் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. அந்த விழா மேடையில் இந்த படத்துக்கான தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார் விஜய். அனேகமாக காவல் காதல் "காவலன்" என மாறலாம் என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.




0 comments:
Post a Comment