நடிகர் விஜய் எனது இனிய நண்பர். பழகுவதற்கு இனிமையானவர் என்று நடிகை அசின் கூறினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழ் படங்களில் நான் நடிக்க மறுப்பதாக வரும் தகவல்களிலும் உண்மையல்ல.சித்திக் இயக்கும் தமிழ் படத்தில் தற்போது நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த படத்தின் கதை மூன்று வருடங்களுக்கு முன்பே எனக்குத் தெரியும்.விஜய் ஜோடியாக இரண்டு படங்களில் நடித்துள்ளேன். இப்போது மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளேன். விஜய் பழக இனிமையானவர். நிறைய ஜோக் சொல்லுவார். படப்பிடிப்பில் நட்பு ரீதியான பழகிக்கொள்கிறோம். அவரது குடும்பத்தையும் எனக்கு நன்றாக தெரியும்.சல்மான்கான் ஜோடியாக ரெடி இந்திபடத்தில் நடிக்கிறேன். சல்மான்கான் ஜாலியாக பழகக்கூடியவர். அவருடன் நடிப்பது சிறந்த அனுபவம் என்றார்.




0 comments:
Post a Comment