விஜய், ஆர்யா, ஜீவா ஆகிய மூவரும்தான் ‘த்ரி இடியட்ஸ்’ படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. தமிழில் விஜய் நடிக்கும் கேரக்டரில் தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கப் போவதாக ஒரு செய்தி ஏற்கனவே வெளியானதல்லவா?
அதில் பெரிய்ய்ய்ய்ய திருத்தம் என்கிறது கோடம்பாக்கத்து குருவி.விஜய் நடிக்கும் படங்கள் பல தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியிருந்தாலும் நேரடி தெலுங்கு படத்தில் விஜய் நடித்ததில்லை. பிற மொழி அழைப்புகளை அவர் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதும் இல்லை. இந்த நிலையில் விஜய்யை நேரடியாக தெலுங்கில் அறிமுகப்படுத்தினால் என்ன என்று நினைத்தாராம் எஸ்.ஏ.சி. அதுவும் ஷங்கரை விட்டால் இந்த அறிமுகத்தை நிகழ்த்த போகிற பெரிய மோதிரக்கை எதுவும் இல்லை என்று முடிவு செய்ததால் தெலுங்கிலும் விஜய்யையே நடிக்க வைக்க முயற்சி எடுக்கிறாராம்.



0 comments:
Post a Comment