Home » » விஜய் நடிக்கும் `காவலன்'

விஜய் நடிக்கும் `காவலன்'

விஜய் நடிக்கும் 51-வது படத்திற்கு காவல்காரன், காவல் காதல் என்று பலவிதமான தலைப்புகள் யூகங்களாக வந்தன. தீவிர பரிசீலனைக்குப் பின் இப்போது காவலன் என்கிற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக மித்ரா, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஜ்கிரண், வடிவேல், ரோஜா, லிவிங்ஸ்ன், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, மற்றும் பலர் நடிக்கிறார்கள்.


இசை: வித்யாசாகர், ஒளிப்பதிவு: என்.கே.ஏகாம் பரம், படத் தொகுப்பு:


கே.ஆர். கவுரிசங்கர், சண்டைப் பயிற்சி ஸ்டண்ட் சிவா, வசனம், குருவரன், பாடல்கள் பா.விஜய், கபிலன், விவேகா, நடனம், ராஜு சுந்தரம், தினேஷ், விஷ்ணு தேவா, நிர்வாக தயாரிப்பாளர்: விஸ்வநாதன், தயாரிப்பு மேற்பார்வை உமாபதிராஜ், தயாரிப்பு நிர்வாகம் சுதாகர்ராஜு, முத்து கருப்பையா, கதை, திரைக்கதை, இயக்கம் சித்திக்.தயாரிப்பு: சி.ரோமேஷ் பாபு. இவர் ஏகவீரா கிரியேஷன்ஸ் சார்பில் அதிக செலவில் இப்படத்தை தயாரிக்கிறார்.


காரைக்குடி, கும்பகோணம், வேலூர் பகுதிகளிலும், மலேசியா, பேங்காங்க் முதலிய வெளிநாடுகளிலும் படமாகி 80 சதவீதம் முடிவடைந்து விட்ட இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கேரளா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெற உள்ளது. விஜய் படங்களிலேயே மிகவும் வித்தியாசமாக எல்லோரும் ரசிக்கும் படமாக காவலன் உருவாகிறது என்றும் குடும்பம் குடும்பமாக பார்த்து ரசிக்கும் விதத்தில் வேகமாக வளர்ந்து விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்றும் இயக்குனர் கூறினார்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan