“3 இடியட்ஸ்” படத்தின் தமிழ்ப் பதிப்பில் விஜய்யும், தெலுங்குப் பதிப்பில் மகேஷ் பாபுவும் நாயகர்களாக நடிக்கிறார்கள். விஜய்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் முதல் படம் என்பதால் படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு.
Hans Zimmer மற்றும் James Horner போன்ற மேற்கத்திய இசையமைப்பாளர்களின் தாக்கத்தினை ஹாரிஸின் இசையில் அடிக்கடி காணலாம். கோலிவுட், டோலிவுட் என இரண்டு இடங்களிலும் ஹாரிஸ் தற்பொழுது பிஸியாக வலம் வருகிறார்.
“3 இடியட்ஸ்” மறுபதிப்பில் ஹாரிஸ் தன் தனித்திறமையை வெளிக்காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், எந்திரனின் அதிரடி வெற்றிக்கு பிறகு ஷங்கர் இயக்கும் படம் என்பதால் தரமான படைப்பாகவே உருவாக்குவார் என நம்பலாம்.
சில நாட்களுக்கு முன் இப்படத்தின் முதல் “ட்யூன்” ஷங்கரிடம் தரப்பட்டுள்ளது. அதனைக்கேட்ட ஷங்கருக்கு பரம திருப்தியாம். 2005-ம் ஆண்டு வெளிவந்த ஷங்கரின் “அந்நியன்” படத்திற்கு ஹாரிஸ் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் பெரிய வெற்றியை ஈட்டின என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் முதல் படப்பிடிப்புக்கு செல்லவுள்ளனர் படக்குழுவினர்
1 comments:
wwow....welcome
Post a Comment