விஜயின் இயக்கத்தில் அஜித் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துள்ளார். தற்பொழுது அஜித்தின் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். அஜித்தின் “கிரீடம்” படத்தை தனது கன்னி முயற்சியாக விஜய் இயக்கியிருந்தார்.அஜித் படத்தின் மூலம் விஜய் இயக்குனர் அவதாரம் எடுத்தது போல, தற்பொழுது விஜய் படத்தின் மூலம் அஜித் இயக்குனராகப்போகிறார். குழப்பமாக இருக்கிறதா ? இயக்கப்போவது தல அஜித் இல்லீங்க. இந்த அஜித் ராம்கோபால் வர்மாவின் துணை இயக்குனராக பணியாற்றியவர்.
தற்பொழுது தன் கவனம் முழுவதையும் தென்னிந்திய திரைத்துறையின் மீது செலுத்தியுள்ள ராம்கோபால் வர்மா, ஒரு படத்தை ஹிந்தி, தமிழ் என இரண்டு மொழிகளிலும் தயாரிக்கவுள்ளார். தற்பொழுது இப்படத்தின் தமிழ்ப் பதிப்பின் நாயகன் “இளைய தளபதி விஜய்” என்பது மட்டும் உறுதியாகிவுள்ளது.
படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழு விரைவில் முடிவு செய்யப்பட உள்ளது. ஹிந்திப் பதிப்பின் நாயகனாக “அக்ஷய் கண்ணா” நடிக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக “நாடோடிகள்” படத்தின் மூலம் புகழ் பெற்ற “அனன்யா” நடிக்கவுள்ளார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.




0 comments:
Post a Comment