
அசின் விவகாரத்தால் வெளிநாடுவாழ் தமிழ்சங்கங்கங்கள் அசின் நடித்த படத்தை
வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெறிவித்துவருகிறார்கள். இந்த நிலையிலும் காவலனின்
வெளிநாட்டு உரிமையை பிரபல வினியோகஸ்தர் “டேன்ரா பிலிம்ஸ்” உரிமையாளர் ஜே.கே.சரவணா மிகப்பெரிய தொகைக்கு வாங்கியிருக்கிறார்.ஏற்கனவே விஜய்-சித்திக் கூட்டணியில் வெளிவந்த “ப்ரண்ட்ஸ்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது அனைவரும் அறிந்ததே. அதே மேஜிக் காவலனிலும் தொடரும் என்றும்,
விஜய்க்கு இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றும் காவலன்
யூனிட்டிலிருந்து கூறுகிறார்கள்.
விஜய்-வடிவேலு காம்பினேஷனில் வெளிவந்த படங்கள் அனைத்திலும் காமெடி கலைகட்டியிருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த படத்திலும்
விஜய்-வடிவேலு கெமிஸ்ட்ரி பட்டைய கிளப்பியிருப்பதாகச் சொல்கிறார்கள் “காவலன்” பட
யூனிட்டார். ரசிகர்களின் எதிப்பார்ப்பை எகிறவைத்துள்ள “காவலன்” டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
காவலன் மேஜிக் ஸ்டார்ட் ஆயாச்சுங்கோ…
0 comments:
Post a Comment