3 இடியட்ஸில் நடிக்க இலியானாவுக்கு ரூ.1.50 கோடி
3 இடியட்ஸ்’ படத்தில் நடிக்க இலியானாவுக்கு ரூ.1.50 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியில் ஹிட்டான, ‘3 இடியட்ஸ்’ படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் ஹீரோக்களாக விஜய், ஜீவா நடிக்கின்றனர். இன்னொரு ஹீரோ முடிவாகவில்லை.
ஹீரோயினாக இலியானா நடிக்கிறார். தமிழில், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை ஷங்கர் இயக்குகிறார். தெலுங்கில் ஹீரோவாக மகேஷ் பாபு நடிக்கிறார். தமிழ், தெலு ங்கில் ஹீரோயினாக நடிப்பதற்கு ரூ.1.50 கோடி இலியானாவுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது, தென்னிந்திய சினிமாவில் ஒரு ஹீரோயினுக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச சம்பளம் ஆகும்.
|
0 comments:
Post a Comment