ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமிர்கான், மாதவன், சர்மான் ஜோஷி, கரீனா கபூர் நடித்த இந்தி படம், ‘3 இடியட்ஸ்’. இந்தியில் ஹிட்டான இந்த படம் தமிழில் ரீமேக் ஆகிறது. ‘எந்திரன்’ படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு ஷங்கர் இந்த படத்தை இயக்குகிறார். ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிக்கும் இதில் அமீர்கான் வேடத்தைச் செய்யப் போகிறவர் விஜய். மாதவன் வேடத்தில் ஜீவாவும், நடிக்கிறார்கள். கரீனா கபூர் நடித்த வேடத்தில் இலியானா நடிக்கிறார். ஷர்மான் ஜோஷி பாத்திரத்தில் யார் நடிப்பார் என புரியாமல் இருந்தது. விஜய், ஜீவா நடிப்பது உறுதியான நிலையில் மூன்றாவது ஹீரோவாக ஆர்யா நடிப்பார் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் திடீர் திருப்பமாக ஆர்யாவுக்குப் பதில் ஸ்ரீகாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ஆர்யாவின் கால்ஷீட் நிரம்பி வழிவதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டாலும், பாலாவின் அவன் இவன் படத்தில் ஆர்யா பிஸியாக இருப்பதே 3இடியட்ஸில் அவர் நடிக்க மறுத்ததற்கு காரணம் என்கிறார்கள்.




0 comments:
Post a Comment