தீபாவளிக்கு இனிப்புகளை கொடுத்து மகிழும் நடிகர்களின் மத்தியில் விஜய் கொஞ்சம் வித்தியாசமாகவும், முக்கியமானதாகவும் ஒன்றை செய்திருக்கிறார். இந்த வருட தீபாவளி பண்டிகைக்காக ஏழை விவசாயிகளுக்கும், ஆதரவற்ற பெண்கள் என 108 பேருக்கு கன்றுடன் கூடிய கறவைப் பசுக்களை தானமாக கொடுத்திருக்கிறார்.
உடுமலைப் பேட்டையில் இலட்சக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள இந்த பசுக்களை வாங்குவதற்காக ஒரு குழுவே இரவு பகல் பாராமல் உழைத்தார்களாம்.நிகழ்ச்சியில் பேசிய விஜய்:
“ஒரு பசுமாடு இருந்தா ஒரு குடும்பம் பிழைக்கும் என்று கூறுவார்கள் சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு என்ற பாடல் வரிகளையும் புரட்சித் தலைவர் பாடி இருக்கிறார். தானத்தில் சிறந்தது பசுதானம் என்று புரணாங்கள் சொல்லுகின்றன. அதனால் இந்த தீபாவளிக்கு இவர்கள் இன்றைக்கே வருமானத்துடன் பயன்பெறுகிறமாதிரி இந்த பசுதானத்தை வழங்குகிறோம். இந்தியா விவசாய நாடு, இருந்தும் விவசாயிகளின் நிலைமை ரொம்ப மேசமாக இருக்கிறது.
விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் விவசாயத்தை விட்டு விட்டு வேறு தொழில் பார்க்க போகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் என் கண்ணோட்டம் முழுவதும் விவசாயிகளின் உயர்வு மீதுதான். அவர்களின் சிலரின் உயர்விற்கு என்னால் ஆன இந்த பணியை செய்திருக்கிறேன். இதன் மூலம் 108 குடும்பங்கள், அந்த குடும்பத்து உறுப்பினர்கள் சந்தோஷமடைந்து அவர்கள் கொண்டாடுகிற தீபாவளி, நான் கொண்டாடுகிற தீபாவளி மாதிரிதான்” என்றார்.
இந்த விழாவில் “வேலாயுதம்” படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் ஜெயம் ராஜா, தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் தம்பி சுரேஷ், உடுமலைப்பேட்டை நகராட்சி தலைவர் மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.




0 comments:
Post a Comment