சொல்லிக் கொடுத்த குருவை மறந்துவிடக் கூடாது என்பதற்காகதான் என் பெயருடன் என் குருவின் பெயரையும் சேர்த்துக் கொண்டேன்" என்றார் எஸ்.ஏ.சி ராம்கி. புரிந்திருக்குமே... யார் இவருடைய குரு என்று!
'நானும் என் காதலும்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு விஜய்யின் அப்பாவும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரும் அவரது மனைவி ஷோபாவும் வந்திருந்தார்கள். அவர்கள் முன்னிலையில் படத்தின் இயக்குனர் ராம்கி சொன்ன வார்த்தைகள்தான் நாம் முதலில் சொன்னது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெ.பி. எஸ்.ஏ.சியிடம் கார் டிரைவராக இருந்தவர். பின்பு அவர் படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பிரமோஷன் ஆனார். இப்போது தயாரிப்பாளராகவும் ஆகிவிட்டார். எங்கிட்ட வேலை பார்த்தவங்க இன்னைக்கு பெரிய நிலையில் இருக்காங்க என்றால் அது எனக்குதான் பெருமை. ஷங்கர், பவித்ரன், ஏ.வெங்கடேஷ், ராஜேஷ் எம் என்று சுமார் இருபது பேர் இன்னைக்கு சினிமாவில் முக்கியமான இடத்தில் இருக்காங்க. எஸ்.ஏ.சி ராம்கி, ஜெ.பி க்கும் அந்த இடம் கிடைக்கணும் என்று வாழ்த்தினார் எஸ்.ஏ.சந்திரசேகர். எங்கிட்ட யாரு வேலை பார்த்தாலும் இரண்டு மூணு படம் தாண்டுச்சுன்னா போயி எங்காவது படம் பண்ணுன்னு விரட்டி விட்டுருவேன். மனுஷன்னா ஓடிக்கிட்டே இருக்கணும். ஓட முடியலைன்னா நடந்துகிட்டாவது இருக்கணும். நடக்கவும் முடியலையா, நிற்கணும். உட்கார்ந்துட மட்டும் கூடாது. உட்கார்ந்தா படுக்கணும்னு தோணும். படுத்தா... அவ்வளவுதான். கோடம்பாக்கத்துல மண்ணள்ளி போட்டு மூடிருவாங்க என்று கூறிய எஸ்.ஏ.சி பேச்சு வாக்கில் இன்னொரு தகவலையும் சொன்னார்.
நானும் விஜய்யும் டிஸ்கஸ் பண்ணுவோம். கோடிக்கணக்குல செலவு பண்ணி நீங்களே டைரக்ஷன் பண்ணணுமான்னு கேட்பார். வேணும் வேணாம்னு விவாதம் ஓடும். கிளம்பும் போது நான் அடுத்து ஒரு படம் பண்றேன்னுதான் கிளம்புவேன். என்னால சும்மா உட்கார முடியாது. நான் எடுக்கிற படம் லாபம் சம்பாதிக்குதோ, இல்ல நஷ்டமாவுதோ, அத பற்றி கவலை இல்லை. உழைக்கணும். என் பிள்ளை சம்பாதிக்கிற பணம் எல்லாம் அவருக்கு சொத்துகளா வாங்கி போட்டுருக்கேன். நான் சாப்பிடுற காசு நான் சம்பாசித்தா இருக்கணும் என்றார் எஸ்.ஏ.சி.




0 comments:
Post a Comment