
இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி என சமூக கருத்துக்களை வலியுறுத்தியும், அரசியல்வாதிகளின் ஊழலை சாடியும், தூய்மையான நல்லாட்சி அமையவும், சுய ஒழுக்கத்தை போற்றியும், வரி ஏய்ப்பவர்களை கண்டித்தும் இயக்கிய நீங்கள் உங்கள் தயாரிபில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களையும் தரமானதாக படைத்ததில் உங்களின் கலை தாகத்தை வெளிப்படுத்தியது.
சிறப்பான தொண்டை புரிந்துகொண்டிருப்பமைக்கு உங்களுக்கு நன்றிகள் பல.
சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் பாதிப்பிலேயே இந்த இடுகையை உங்களுக்கு இட முனைந்தேன். 3 இடியட்ஸ்: விஜய் நடிப்பதாக முடிவெடுக்கப்பட்டு பின்னர் ஆளும் வர்க்கத்தின் தூண்டுதலால் நீக்கப்பட்டதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது
சிறந்த ஆட்சி எப்படி அமையும் என்றும், சுய ஒழுக்கத்தை சூடிட்டும் காட்டிய ஷங்கர் இப்படி செய்யலாமா?. உங்களின் நேர்மையும், சமூக அக்கறையும் தெளிவாக தெரிந்தது எங்களுக்கு, உங்களின் இயக்கங்களில், ஆனால் எங்களுக்கு தெரியவில்லை, உங்களிடமும் இப்படி ஒரு பயம் இருக்கும் என்று
அத்துடன் விஜய் ஹேர் ஸ்டைல் மாற்ற மறுத்துவிட்டார் ,அவருக்கு கால் சீட் பிரச்சனை என நீக்கப்பட்டதற்க்கு கூறும் காரணங்கள் பொய்யானவை. ஏனனில் விஜய் நீங்கள் சொன்னது போல் தலைமுடியை ஓட்ட வெட்டியிருந்தார் அத்துடன் நீங்கள் இப்படத்தில் நடிக்க வைக்கும் சூர்யாவுக்கும் கால் சீட் பிரச்சனை ( 7ம் அறிவு முடிய ஆறு மாதம் உண்டு)எனவே விஜய்க்கு கால் சீட் பிரச்சனை என்பதும் பொய்.ஆகவே அரசியல் பிரமுகர்களின் தூண்டுதலால் தான் விஜயை நீக்கியுள்ளீர்கள் என்பது வெளிப்படை உண்மை.
அப்படியானால் உங்கள் இந்தியன்,அந்நியன்,சிவாஜி,முதல்வன் எல்லாம் பொய்யா?? உங்கள் படத்தில் கூறிய கருத்துக்கள் எல்லாம் வெறும் சினிமாவா??
ஆளும் கட்சியின் சுய லாபத்திற்க்காக பின்னப்படும் சூழ்ச்சி வலையில் தயவுசெய்து சிக்காமல் இருங்கள்.
முதல்வனில் முதல்வரை கேள்வி கேட்கும் பத்திரிக்கை நிருபராக நாம் உங்களை பார்க்கிறோம். தன் ஒரே மகனையே கொலை செய்யும் இந்தியனாக உங்களை நினைக்கிறேன். நடுநிலை தவறாமல் ஒரு முடிவெடுத்து உங்கள் nativity-யை இழக்காமல் மென்மேலும் பெரிய வளர்ச்சிகளை பெற வாழ்த்துக்களும் வணக்கங்களும்
உண்மையுள்ள விஜய் ரசிகனின் நாடித்துடிப்பு....!!See More
0 comments:
Post a Comment