Home » » காவலன் பொங்கலுக்கு ரிலீஸ்

காவலன் பொங்கலுக்கு ரிலீஸ்


தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் டாக் காவலன் ரிலீஸ் தான். கலைஞர் குடும்பத்தை எதிர்த்து இந்த படத்தை ஜெயிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் தளபதி.
இவரின் படத்தை தானாகவே ரிலீஸ் செய்வதால் இந்த படத்திற்கு எந்த தொலைக்காட்சியிலும் விளம்பரம் வரவும் வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. அப்படியும் வந்தால் ராஜ் டீவியிலும், ஜெயா டிவியிலுமே வரவேண்டும். அது வந்தும் எந்த பயனும் இல்லை என்பது உலகறிந்த விசயம். இரண்டு நாட்களாக தினகரன் நாளிதழ்களில் கூட விளம்பரம் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் 24 ஆம் தேதி என்று ஷக்தி சிதம்பரம் வீர வசனம் பேசினாலும், படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் நிச்சயமாக அறிவிக்கப்படவில்லை. 17 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட மன்மதன் அம்புவும் 23 ஆம் தேதிக்கு தள்ளிப்போனதால், ஏற்கனவே தள்ளுமுள்ளுவில் இருக்கும் தியேட்டர் பிரச்சனை மேலும் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. பேசாமல் பொங்கலுக்கு ரிலீஸ் செய்துவிடலாமா என்றும் ஒரு யோசனை இருப்பதாக தெரிகிறது.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan