Home » » எனக்கு பாலபிஷேகம் வேண்டாம் : விஜய் ரசிகர்களுக்கு வேண்கோள்

எனக்கு பாலபிஷேகம் வேண்டாம் : விஜய் ரசிகர்களுக்கு வேண்கோள்


இளையதளபதி விஜயின் தற்போது வெளியான படமான "காவலன்" வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் விஜய் டிவியின் நேற்றைய குடியரசு தின...


சிறப்பு நிகழ்ச்சியில் விஜயின் காவலன் பட வெற்றி கொண்டாட்டமாக "காவலன் எங்கள் காதலன்"என்னும் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது.

இந்நிகழ்வில் இளையதளபதி விஜய், அசின் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பல விடயங்களை விஜய் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

அதில் விஜய் அவர்கள் பேசுகையில்:

"எனது படம் ரிலீஸ் ஆகும் போது பட்டாசு வெடிகிறீங்க, கொண்டடுரீங்க, என்ஜாய் பண்ணுறீங்க எல்லாம் ஓகே ஆனால் பாலபிஷேகம் மட்டும் வேண்டாம் ஏனெனில் நம்ம நாட்டில ஒரு பால் பக்கெட் கூட வேண்டமுடியாத அளவுக்கு மக்கள் இருக்கிறாங்க அதனால் ஏன் அந்த புனிதமான பொருளை ஒரு கட்அவுட் மேல ஊத்தணும், இனிமேல் அப்படியான காரியங்களை செய்யாமல் இருந்தால் நான் சந்தோஷ மடைவேன்" என கூறினார். அத்துடன் காவலன் படத்தினை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan