ஆமிர்கான், மாதவன், சர்மான் ஜோஷி, கரீனா கபூர் நடித்து இந்தியில் ஹிட்டான படம், ‘3 இடியட்ஸ்’. இந்தப் படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்கிறது.
ஆமிர்கான் வேடத்தில் விஜய் நடிக்கிறார். முதலில் இவர் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இப்போது அவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், அனுயா உட்பட பலர் நடிக்கின்றனர். ‘எந்திரன்’ சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு, ஷங்கர் இயக்குகிறார். படத்துக்கு ‘நண்பன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். நா.முத்துக்குமார் பாடல்கள். படத்தின் ஷூட்டிங், ஊட்டியில் நடந்து வருகிறது. இம்மாதம் 25ம் தேதி முதல் விஜய் நடிக்கும் காட்சி படமாக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment