படிக்கிற நல்ல பழக்கம் மட்டும் நம்முடைய ஹீரோக்களிடம் கிடையாது. கமல், நாசர் என்று குறைவான விதிவிலக்குகளை கணக்கில் எடுக்க முடியாது. அந்த வரிசையில் விஜய்யும் இணைந்துள்ளார்.விஜய்யும் விரும்பிப் படிக்கிறவரல்ல. பிரபல வார இதழ்களை புரட்டிப்பார்ப்பது வழக்கம். அப்படிப்பட்டவர் நண்பன் படத்தின் இடைவேளையில் தலையணை சைஸ் நாவலை சுவாரஸியமாக வாசித்துக் கொண்டிருக்கிறார். அந்த நாவல் கல்கியின் பொன்னியின் செல்வன்.
மணிரத்னம் அடுத்து பொன்னியின் செல்வன் நாவலை படமாக்குகிறார். இதில் வந்தியதேவனாக விஜய் நடிக்கிறார். படத்தின் கதையை தெரிந்து கொள்வதில் அவர் மிகவும் ஆர்வமாக இருப்பதே இதற்கு காரணம்.



0 comments:
Post a Comment