
லொட்டு லொஸ்கு நடிகர்கள் கூட ஹன்சிகா கால்ஷீட் இருக்கான்னு விசாரியுங்களேன் என்கிறார்களாம் தங்கள் மேனேஜர்களிடம். பக்தன் பரவசப்பட்டாலும், தெய்வம் திரும்பி பார்க்கணுமே! ஹன்சிகா பார்வையெல்லாம் மூன்று கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் மீதுதான் இருக்கிறது. அப்படியிருந்தும் மார்க்கெட்டில் பரபரப்பாக இருக்கிறார் இவர். இங்கு சில்லரையாகவும் மொத்தமாகவும் கால்ஷீட் கிடைக்கும் என்று போர்டு போடாத குறையாக வாய்ப்பு தேடும் நடிகைகளுக்கு மத்தியில், நோ ஸ்டாக் போர்டு மாட்டுகிற அளவுக்கு வருஷம் முழுக்க பிஸியாகிவிட்டார் ஹன்சிகா.
அடுத்து விஜய் நடிக்கும் பகலவன் படத்திலும் ஹன்சிகாதான் ஜோடியாம்!
0 comments:
Post a Comment