Home » » விஜயகாந்த்திற்கு விஜய் நேரில் வாழ்த்து

விஜயகாந்த்திற்கு விஜய் நேரில் வாழ்த்து

தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கும் விஜயகாந்துக்கு நடிகர் விஜய் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் நேரில் வாழ்த்துத்  தெரிவித்துள்ளனர். தமிழகத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் நின்று பெரும் வெற்றி பெற்றுள்ளது விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் பொறுப்பேற்கிறார். 


அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க நேரில் சந்தித்த விஜய், மலர்க்கொத்துக் கொடுத்து வாழ்த்தினார். இச் சந்திப்பின் போது, இயக்குனர்கள் அமீர், சேரன் ஆகியோரும் உடன் சென்று விஜய்காந்துக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். வந்த அனைவரையும் வரவேற்ற விஜயகாந்த், அனைவருடனும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அதிமுக ஆதரவாளரான நடிகர் விஜயகுமாரும், விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.  விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து முழுநேர அரசியல்வாதியான பிறகு, அவரை இந்த இயக்குநர்களும் நடிகர்களும் தேடிப்பபோய் சந்திப்பது இதுவே முதல்முறை.

Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan