தல அஜித்தின் மங்காத்தா படத்தின் “விளையாடு மங்காத்தா” ஒற்றைப் பாடல் வெளியீடு கிளப்பிய சூட்டை அடுத்து, அந்தப் படத்தின் இசையை ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியிடுகிறார்கள். தற்போது விஜய் நடிப்பில் தயாராகி வரும் வேலாயுதம் படத்தின் இசையையும் வெளியிட தேதி குறித்துவிட்டார்கள்.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமான விழாவில் வெளியிட இருக்கிறார்கள். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். ஆஸ்கார் ரவி 25 கோடியில் படத்தை தயாரித்துள்ளார்.
கேரளா விநியோகஸ்தர்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையில் வேலாயுதம் வெளிவரும் என்று அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இப்படத்தினை ஆஸ்கார் ரவிச்சந்திரன் சொந்தமாக வெளியிட இருக்கிறாராம். இதனால் இப்படத்தை செப்டம்பருக்கு தள்ளி வைக்க இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.
விஜய் நடித்து வெளிவந்த படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் வேலாயுதம் படத்தில் வரும் முதல் பாடல் மற்றும் இறுதி சண்டைக் காட்சி ஆகியவற்றுக்கு ஆன செலவுகள் மட்டுமே 10 கோடிகள் என்கிறார்கள் தயாரிப்பாளர் வட்டாரத்தில். படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருப்பதால் தீபாளிக்கு வெளியிட்டாலும் ஆச்சர்யமில்லையாம்!

0 comments:
Post a Comment