இந்தியாவின் 65வது சுதந்திர தினத்தையொட்டி, ஜனாதிபதி, பிரதமர், அந்ததந்த மாநில முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் தங்களது சுதந்திர தின செய்தியை நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளனர். அதுபோல் தமிழ் சினிமா நடிகர், நடிகையரும் தங்களது சுதந்திர தின செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளனர்.நடிகர் விஜய் வெளியிட்டுள்ள சுதந்திர தின செய்தியில், இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் நூறு சதவீதம் கல்வி பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் படிக்க என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். பொருளாதாரத்தில் பின் தங்கிய சிலருக்கு உயர் கல்வி செலவையும் ஏற்றுள்ளேன். இதுதவிர கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் துவக்கியுள்ளேன். அங்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகின்றன. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.



0 comments:
Post a Comment