கில்லி திரைப்படத்தில் உள்ள அப்படி போடு பாடலை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யவுள்ளார் நடிகர் அக்க்ஷய் குமார்.
நடிகர் விஜய்யை பிரபலமடைய வைத்த படம் கில்லி. அதிலும் குறிப்பாக நடிகை த்ரிஷாவுடன் விஜய் ஆடியுள்ள அப்படி போடு பாடல் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
இப்பாடலை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்ய பலரும் போட்டி போட்டனர். இறுதியாக வில்லன் நடிகர் சோனு சூட் இந்த பாட்டுக்கான உரிமையை வாங்கி, தன்னுடைய படத்தில் உபயோகப்படுத்த திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் சோனு சூட்டிடம் பேசி, சமாதானம் செய்து அந்த பாடலை வாங்கியுள்ளார் பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்க்ஷய் குமார்.
இவர் விரைவில் நடிக்கவிருக்கும் நாம் ஹாய் பாஸ் என்ற படத்தில் தான் இந்த அப்படி போடு பாடல் இடம்பெற இருக்கிறதாம்.
2010ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த போக்கிரி ராஜா திரைப்படத்தின் மொழி்மாற்றம் தான் நாம் ஹாய் பாஸ் திரைப்படம்.
சமீப காலமாக தென்னிந்திய திரைப்படங்கள் பாலிவுட்டில் அதிகளவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெற்றியடைந்து வருகிறது.
அதேபோல் இப்படமும் வெற்றியடையும், அதற்கு அப்படி போடு பாடலும் ஒரு துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அக்க்ஷய்.
0 comments:
Post a Comment