Home » » துப்பக்கியில் முக்கிய வேடத்தில் நானா? -சரத்குமார் விளக்கம்

துப்பக்கியில் முக்கிய வேடத்தில் நானா? -சரத்குமார் விளக்கம்

இளையதளபதி விஜய்யுடன் துப்பாக்கியில் நடிக்கவில்லை என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து சரத்குமார் கூறுகையில்...
எனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு இப்போதுதான் சென்னை திரும்பினேன்.

உடனே துப்பாக்கியில் நடிப்பது குறித்து ஏகப்பட்ட அழைப்புகள் வந்தது.

கடந்த சில திகதிகளாக வெளியான செய்திகளைப் பார்த்துதான் துப்பாக்கியில் நான் முக்கிய வேடத்தில் நடிப்பதே தெரிந்தது.

இதில் எந்த உண்மையும் இல்லை. தவறான செய்தி. குறைந்தபட்சம் விசாரிக்காமல் கூட வெளியிட்டுவிடுவதா என்றார்.

மல்டி ஹீரோ சப்ஜெக்டில் நடிப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் இன்றைய திகதிக்கு தமிழில் ரஜினியுடன் கோச்சடையான், மலையாளத்தில் சில படங்கள், கன்னடத்தில் படங்கள் என நடித்து வருகின்றேன்.

விரைவில் சினேகாவும் நானும் நடித்த விடியல் படம் வெளியாகவிருக்கிறது என்று கூறியுள்ளார்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan