Home » » ஜூலை 1ல் துப்பாக்கி டிரெய்லர் வெளியீடு

ஜூலை 1ல் துப்பாக்கி டிரெய்லர் வெளியீடு

விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது எல்லா ரசிகர்களின் எதிர்பார்ப்பைப்பெற்ற துப்பாக்கி திரைப்படத்தின் முதலாவது டிரெய்லர் ஜூலை மாதம் 1ம் திகதி வெளியாகவுள்ளது.


இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாளுக்கு வெளிவரும் என்று எதிர்பார்த்திருந்த துப்பாக்கி டிரெய்லர் விஜய்யின் பிறந்தநாள் கருதியும், புது படங்களின் வெளியீடுகள் அன்றைய தினம் இருப்பதனாலும் 10 நாட்களின் பின்னர் ஜூலை 1 ம் திகதி வெளியாகும் என படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய், காஜல் அகர்வால் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படம் துப்பாக்கி. கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
இந்தப் படம் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ஒரு போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள்ஆவலுடன் இருக்கிறார்கள்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan