ஏ ஆர் முருகதாஸின் இயக்கத்தில் இளையதளபதி விஜயின் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் துப்பாக்கி படத்தின் தலைப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு துப்பாக்கிக்கு சார்பாக அமைந்ததால் துப்பாக்கி அணி தற்போது வெளியீட்டு பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளது. அந்த வகையில் துப்பாக்கி திரைப்படத்தின் ரீஸர் இம்மாதம் 10ம் திகதியும் மற்றும் விஜய் பாடிய பாடல் உட்பட 7 பாடல்கள் கொண்ட இசை வெளியீட்டு விழா என்பன இம்மாதம் 11ம் திகதி வெளியாகவுள்ளது எனவும் ஏ.ஆர். முருகதாஸ் தனது ருவிற்றர் பக்கத்தில் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த தகவல் அறிந்த விஜய் ரசிகர்கள் உற்சாக வெற்றிக்களிப்பில் உள்ளனர்.
0 comments:
Post a Comment