இளைய தளபதி விஜய் , திரிசா ஜோடியாக நடித்து தரணி இயக்கத்தில் 2004ல் வெளியாகி 50 கோடி ரூபா வரை வசூலில் சாதனை படைத்தது கில்லி படம். இதன் இரண்டாம் பாகம் கில்லி 2 என்ற பெயரில் எடுக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
கில்லி 2 படத்திலும் விஜய்யே கதானாயகனாக நடிப்பார் எனவும் த்ரிஷாவுக்கு பதில் அமலாபால் நடிப்பதாக தெரிகின்றது. இதனை அமலாபாலும் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது , நான் ஒரு விஜய் ரசிகை. கில்லி படம் பல தடவை பார்த்திருக்கிறேன். திரிஷா கதாப்பாத்திரம் மிகவும் பிடித்தது. அதே வேடத்தில் நடிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன். அது விரைவில் நடக்கும். என தெரிவித்துள்ளார்.
தற்போது விஜய், அமலாபால் இணைந்து நடிக்கும் ஏ.எல்.விஜய் இயக்கும் தங்க மகன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த படம் பூர்த்தியானதும் கில்லி2 பற்றிய உத்தியோக பூர்வமான தகவல்கள் வெளியாகும்.
0 comments:
Post a Comment