Home » » தங்கமகனுக்கும் சிக்கல்- தொடர் தேடலில் விஜய்

தங்கமகனுக்கும் சிக்கல்- தொடர் தேடலில் விஜய்

அதென்னவோ தெரியவில்லை, விஜய் பட தலைப்புகளுக்கு மட்டும் வேகத்தடை போடுகிறது விதி. ஏற்கனவே காவல்காரன் படத்தலைப்பை தன்படத்திற்கு வைத்தார் அவர். இந்த தலைப்புக்கு சொந்தக்காரர்களான சத்யா மூவிஸ் நிறுவனத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க,
காவலன் என்று பெயரை மாற்றினார்கள். துப்பாக்கி தலைப்புக்கும் கள்ளதுப்பாக்கி தலைப்புக்கும் நடந்த சண்டை ஊரே அறிந்த விஷயம்.

இப்போது தலைவன் என்ற தலைப்பை ­விரும்பியவருக்கு அதிலும் சிக்கல். இந்த தலைப்பு சசிகலாவின் உறவினர் பாஸ்கரனுக்கு சொந்தம். வேறு வழியில்லாமல் தங்கமகன் என்று வைத்தார்களாம். இதுவும் சத்யா மூவிஸ் கையிலிருப்பதால், மீண்டும் சிக்கல். பிரபல தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பனிடம் நைசாக போட்டு வாங்கினார்களாம் இந்த தங்கமகன் தலைப்புக்கு. அவரோ,'அதெல்லாம் முடியாது' என்று கூறிவிட மீண்டும் தலைப்பு தேடி பெரிய வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.

விஜய் படத்திற்கு வெறும் 'வி' என்று தலைப்பு வைத்தால் கூட தியேட்டர் பிச்சுக்கும். அப்புறம் எதற்கு இத்தனை பிரயத்தனம்?

Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan