Home » » சந்தானத்தினால் கவலையை மறந்த அமலாபால்

சந்தானத்தினால் கவலையை மறந்த அமலாபால்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பரபரப்பாக நடித்து வரும் அமலாபால் தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மிகவும் பரபரப்பாக நடித்து வருவதால் தொடர்ந்து படப்பிடிப்புக்காக உள்நாட்டுக்கும் வெளிநாட்டுக்கும் இடையே பறந்து கொண்டே இருக்கிறார்.

 அப்படி தெலுங்கு படப்பிடிப்புக்காக அண்மையில் ஸ்பெயினுக்கு சென்றிருக்கிறார் அமலாபால். அந்தப் படப்பிடிப்பை முடித்த கையோடு உடனே 'தலைவா' படப்பிடிப்புக்காக அவுஸ்திரேலியா பயணித்திருக்கிறார். அவ்வாறு செல்கையில் நடிகை அமலாபால் பயணித்த அதே விமானத்தில்தான் நடிகர் சந்தானமும் பயணித்தாராம்.

 நீண்ட நேரம் விமான பயணத்தை நினைத்து கவலையடைந்த அமலாபலுக்கு சந்தானத்தை பார்த்ததும் அந்த கவலை பறந்து போய்விட்டதாம். பின்பு இருவரும் ஒருவரையொருவர் கலாய்த்தபடியே விமானத்தில் பயணிக்க, நேரம் போனதே தெரியவில்லையாம்.


Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan