Home » » 13ம் திகதி மதுரையில் ஆரம்பமாகும் ஜில்லா

13ம் திகதி மதுரையில் ஆரம்பமாகும் ஜில்லா

கொலிவுட்டில் தலைவா படத்திற்குப் பின்பு விஜய் நடிக்கவிருக்கும் படம் 'ஜில்லா'வை இயக்குனர் நேசன் இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 13ம் திகதி மதுரையில் தொடங்குகிறது. இதில் மோகன்லால், காஜல் அகர்வால் சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருக்கின்றன. 

இம்மாதம் இறுதி வரை மதுரையில் படப்பிடிப்பு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு யூன் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் நடக்கிறது. சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்கிறார். ஜில்லா படத்தில் விஜய் ஷக்தி என்கிற கதாபாத்திரத்தில் வருகிறார். படம் மதுரையை பின்னணியாக கொண்டு எடுக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan