Home » » தலைவா அரசியல் படம் அல்ல

தலைவா அரசியல் படம் அல்ல

ரம்ஜானை முன்னிட்டு நடிகர் விஜய், அமலாபால் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் தலைவா. தலைவா படமானது வருகின்ற 9ம் திகதி தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தலைவா படத்தை திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இது குறித்து விஜய் கூறுகையில், தலைவா படம் குடும்பத் தோடும், குழந்தைகளோடும் எல்லோரும் ரசிக்க கூடிய படம். இந்த படத்தில் காதல் ஆக்ஷன், காமெடி போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளன. இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் அல்ல. யாரோ சிலர் இது அரசியல் படம் என்று வதந்திகள் பரப்பி வருகிறார்கள். இப்படம் துளி கூட அரசியல் இல்லாத ஒரு சமூக படம் என்றார் விஜய்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan