த்ரீ இடியட்ஸ் படத்தில் விஜய்யுடன் நான் நடித்தால் அஜீத் ரசிகர்கள் கோபத்துக்கு உள்ளாக வேண்டி வரும். எனவே அந்தப் படத்தில் நான் நடிக்க முடியாது என சிம்பு தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில், ஜெமினி நிறுவனத்துக்காக 3 இடியட்ஸ் படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் விஜய் நடிப்பது மட்டும் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. சிம்பு மற்றும் பாய்ஸ் சித்தார்த்தும் நடிப்பதாகக் கூறப்பட்டது.முதல் இச்செய்தியை ஒப்புக் கொண்ட சிம்பு, பின்னர் அப்படியே பின் வாங்கி விட்டார். “3 இடியட்ஸ் படத்தில் நான் நடிக்க முடியாது. இந்தப் படத்தில் ஹீரோ விஜய். அவர் பெரிய நடிகர். ஆனால் எனக்கு அஜீத் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் கோபத்துக்கு நான் ஆளாக முடியாது. எனவே இந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
இப்படி வெளிப்படையாகவே விஜய் ரசிகர்களுக்கு எதிராக சிம்பு கருத்து தெரிவித்துள்ளது தேவையற்ற புகைச்சலை கிளப்பியுள்ளது என சினிமா வட்டாரத்தில் கருதப்படுகிறது.



0 comments:
Post a Comment