
இப்படத்தில் முதலில் நடிக்க ஒப்புக்கொண்ட விஜய் பிறகு தயக்கம் காட்டியதும், பிறகு ஷங்கர் இப்படத்தை இயக்குவதாக அறிவித்த பிறகு, விஜய் இதில் கண்டிப்பாக நடிப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்னும் தெரியப்படாத 3 இடியட்ஸ் தமிழ் பதிப்பிற்க்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையின் மூலம் தனது படங்களை மெறுகேற்றிய ஷங்கர், ஏற்கனவே “அந்நியன்” படத்தின் மூலம் ஹாரிஸ் ஜெயராஜுக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இன்றி சத்யராஜ் இந்த படத்தில் பேராசிரியராக நடிக்கவும் சம்மதித்திருக்கிறாராம்.
ஷங்கர் முதன் முதலாக ரீமேக் படம் ஒன்றை இயக்குகிறார், ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார், ஹாரிஸ் ஜயராஜ் இசையமைக்கிறார் என பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது “3 இடியட்ஸ்” தமிழ் ரீமேக். முடிவாக வேண்டிய ஒன்று அந்த 3 இடியட்ஸ் யார்? யார்? என்பதுதான்.
அமீர்கான் நடித்த வேடத்தில் விஜய் நடிப்பார் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. மற்றொரு வேடத்தில் சிம்பு நடிப்பதாக சொல்லப்படுகிறது (இன்னும் உறுதிசெய்யப்படவில்லை). இருப்பினும் மாதவன் நடிச்ச வேடத்தில் யார் நடிப்பது என்பதுதான் இன்னும் புரளியாகக்கூட வெளிவராத செய்தியாக இருக்கிறது.
ஷங்கருடன் இணைந்து 'முதல்வன்' படத்திலேயே இணைந்து பணியாற்ற வேண்டிய விஜய், '3 இடியட்ஸ்' மூலம் அவருடன் சேர்கிறார். இந்தியில் அமீர்கானின் லீட் ரோலை தமிழிலில் செய்கிறார் விஜய் என உறுதி செய்யப்பட்டது. இந்தியில் தாம் நடித்த கதாப்பாத்திரத்தையே தமிழிலும் மாதவன் செய்வார் என பேசப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தையி...ல் உடன்பாடு எட்டவில்லை. தமிழ் 3 இடியட்ஸ்சில் தாம் நடிக்கவில்லை என்பதை தனது டிவிட்டரில் ரசிகர்கள் வருந்தாத வகையில் தெரிவித்திருக்கிறார், மாதவன்.
இந்தியில் போமன் இரானியின் பிரின்ஸிபல் கதாபாத்திரத்தை யார் செய்வார் என எதிர்பார்ப்போடு காத்திருந்தபோது, எவ்வித யோசனையும் இன்றி, சத்யராஜை தேர்வு செய்தார் ஷங்கர். ஷங்கர் படம் என்றாலே ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை என எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், அவர் தேர்வு செய்துருப்பது 'அன்னியன்' இணை ஹாரிஸ் ஜெயராஜை! இயக்குனர் ஷங்கர் படம் என்றாலே உடன் இருப்பவர், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, ஆனால், '3 இடியட்ஸுக்கு டிக் செய்திருப்பது, 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'ஈரம்' மூலம் வெகுவாக கவரப்பட்ட மனோஜ் பிரேமஹம்சா.
மாதவன் கதாப்பாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற கேள்வியை விட, கரீனா கபூர் ரோலில் யார் வலம்வரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பே எகிறியிருக்கிறது. இப்போதைக்கு இலியானா, த்ரிஷா ஆகியோர் பரிசீலனையில் உள்ளனர். '3 இடியட்ஸ்' வேலைகளை மும்முரமாக இயங்குவதற்கு, 'எந்திரன்' ரிலீஸுக்காக காத்திருக்கிறது, ஜெமினி பிலிம் சர்க்கியூட் நிறுவனம்
0 comments:
Post a Comment