Home » » பத்தாயிரம் விஜய் ரசிகர்களுடன் ▬வே▬லா▬யு▬த▬ம்▬▬❥ பட தொடக்க விழா

பத்தாயிரம் விஜய் ரசிகர்களுடன் ▬வே▬லா▬யு▬த▬ம்▬▬❥ பட தொடக்க விழா


இளைய தளபதி விஜய்யின் ‘காவல்காரன்’ டைட்டில் தற்போது “காவல் காதல்” என்று மாற்றப்பட்டுள்ளது. நாயகி அசின் இந்தி படத்திற்காக இலங்கை போய்விட்டதால், இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களாக தடைபட்டிருந்தது. 




தற்போது விஜய் சம்மந்தப்பட்ட ஸோலோ காட்சிகளை படம்பிடிக்க “காவல் காதல்” டீம் மலேசியா கிளம்பிவிட்டது. “வேலாயுதம்” துவக்க விழாவிற்குள் விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்க முடிவுசெய்துள்ளார் இயக்குனர் சித்திக். 
                விஜய் ஆண்டனி இசையில் டைரக்டர் ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் – ஜெனிலியா ஜோடி நடிக்கும் புதுப்படம் வேலாயுதம். காதலுக்கு மரியாதை படத்துக்கு பிறகு ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் இப்படத்தின் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்த வேலாயு‌தம் படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதன்படி வருகிற 15ம்‌தேதி காலை 9 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் வேலாயுதம் பட தொடக்க விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான விஜய் ரசிகர்கள் பங்‌கேற்க உள்ளனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்கள் அனைவருக்கும் விஜய் படம் போட்ட பனியன்களும், பிரியாணி விருந்தும் வழங்கப்பட இருப்பதாக வேலாயுதம் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் ‌செய்து வருகிறார்





Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan