இந்தியாவில் மட்டுமில்லாது ஆசிய அளவில் வெற்றி பெற்ற ‘3 இடியட்ஸ்’ படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கியுள்ளது ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம்.
இப்படமானது தற்பொழுது இரு மொழிகளிலும் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. இயக்குனர் ஷங்கர் இப்படத்தை இயக்குகிறார். தமிழில் உருவாகும் இப்படத்தை அமீர்கான் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். இந்தியில் மாதவன் நடித்த கதாபாத்திரத்தில் அவரையே நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இப்படத்தில் நடிக்க நடிகர் மாதவன் மறுத்துவிட்டார்.
இது பற்றி மாதவன் கூறியவதாவது:
“தமிழில் உருவாகும் 3 இடியட்ஸ் படத்தில் ஆர்வமாகதான் உள்ளது. ஆனால் வேறு படங்களில் நடித்துகொண்டிருப்பதால் இப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை” என்று கூறியுள்ளார்.



0 comments:
Post a Comment