Home » » விஜயை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திய சிதம்பரம்

விஜயை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திய சிதம்பரம்

இயக்குனர் ஷக்தி சிதம்பரம், தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரம், வினியோகஸ்தர் ஷக்தி சிதம்பரம் என பண்முகம் கொண்டவர். இவர் தயாரிக்கிற படத்தில் கதைக்கு முக்கியத்துவம் இருக்குமோ, இல்லையோ.... நமீதா இருப்பார்.

என்ன காரணத்தினாலோ இவர் கடைசியாக இயக்கி தயாரித்த குரு சிஷ்யனில் நமீ இல்லை. ஆனால் கடைசியில் டைட்டில் போடும்போது ஒரு சீனில் தலை காட்டுவார் நமீ.இப்போது விஷயத்திற்கு வருவோம்... ஷக்தி சிதம்பரத்திற்கு ரொம்ப நாட்களாகவே விஜயை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஆனால் அதற்கான் வாய்ப்பு இதுவரை அமையவில்லை. ஆனாலென்ன... காவல் காதல் படத்தின் தயாரிப்பளரிடமிருந்து காவல் காதல் படத்தையும் மற்றும் படத்தின் நெகட்டிவ் ரைட்ஸ் உட்பட அனைத்தையும் வாங்கிவிட்டாராம் ஷக்தி சிதம்பரம்.அசின் மீது கடும் கோபம் கொண்டிருக்கிறது உலக தமிழர் அமைப்புகள். இந்த படத்தை விடுவேனா பார் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். காவல் காதல் படத்தை வெளியிட சிலர் விஜய்க்கு ஆதரவாக இருந்தாலும் இந்த நேரத்தில் இவ்வளவு தைரியமாக காவல் காதலை ஷக்தி சிதம்பரம் வாங்கி வெளியிடப்போவது விஜயை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan