இதற்கிடையில் இப்படத்தின் தயாரிப்பாளர் படத்தை வேறொரு கைக்கு மாற்றிவிடுவதில் மும்முரம் காட்டுவதை அறிந்த சினிமா பேரடைஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் ஒரு து£ண்டிலை போட, சிக்கியது மீன். நாற்பது கோடியே ஐம்பது லட்சத்திற்கு இந்த படத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கிறாராம் ஷக்தி சிதம்பரம். கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை தன்னிடம் கதை சொல்ல அலையாக அலைந்தவர்தான் இந்த ஷக்தி சிதம்பரம் என்பதும், அவரை ஒரு பொருட்டாகவே தான் மதிக்கவில்லை என்பதையும் அறிந்த விஜய் செம அப்செட். ஏனென்றால் அதே ஷக்தி சிதம்பரத்துடன் ஒரே மேடையில் அமர வேண்டிய நிர்பந்தம் வந்துவிட்டதே!
பொதுவாகவே ரிலீஸ் எப்போது செய்ய வேண்டும் என்பதில் துவங்கி சேட்டிலைட் ரைட்ஸ் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பது வரைக்கும் விஜய் தரப்புடன் பேசிதான் முடிவுக்கு வருவார்கள் விஜய் பட தயாரிப்பாளர்கள். இந்த முறை தனது விருப்பத்திற்கேற்ப முடிவெடுக்க இருக்கிறாராம் ஷக்தி சிதம்பரம்.




0 comments:
Post a Comment