விஜய் நடித்த கடைசி சூப்பர் டூப்பர் ஹிட் போக்கிரி தெலுங்கு மொழியில் சுப்பர் ஹிட் ஆனா படத்தை டைரக்டரும் நடிகருமான பிரபு தேவா இயக்கத்தில் தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்பட்டது.
அதன் பின் வந்த விஜய் நடித்த படங்கள் சொல்லும்படியான முறையில் இல்லை.
விஜய் படம் என்றால் சரியான அளவில் காமெடி அதே அளவில் ஆக்சன் இருக்கும் என்ற பார்முலாவை பின்பற்றாமல் போனது கூட அவரின் சூப்பர் ஹிட் படம் என்ற எல்லையை கடைசியாக வந்த படங்கள் தொடவில்லை. அதிகப்படியான் ஹீரோயிசம் கூட அவரின் வெற்றி படம் என்ற எல்லை தொடாமல் போனதற்கு காரணம்.
அதிகப்படியான ரசிகர்கள் சிறப்பான ஆக்சன் காட்சிகள் இயற்கையாக அவரிடம் இருக்கும் நகைச்சுவை போன்றவை ரஜினி படத்திற்கு ஈடாக அவரின் படங்களும் பேசப்பட்டது ஆனால் ஆனால் அவர் படங்களில் அதிகப்படியான் பஞ்ச வசனங்களும் ஹீரோயசம் பற்றி அதிகம் பேசியதால் அவரின் ரசிகர் தவிர மற்றவர்களால் அவரின் படங்களை ரசிக்க முடியவில்லை
மீண்டும் அவர் அவரின் வெற்றி மந்திரம் என்னும் ரீமேக் படங்களுக்கு திரும்பியுள்ளது. இப்போது வர இருக்கும் அவரின் படங்கள் காவலன் .வேலாயுதம் ,மற்றும் த்ரீ இடியட் போன்றவைகளில் கடைசியாக வந்த படங்களில் செய்த அவரின் ஓவர் ஸ்மார்ட் ஹீரோயசம் மற்றும் பன்ச் டயலாக் இல்லாமல் படத்தை ஒட்டி நடித்தால் மீண்டும் அவர் ரசிகர்களை மட்டும் இல்லாமல் எல்லா தரப்பு மக்களையும் கவர முடியும்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment