விஜய், இலியானா நடிக்க ஷங்கர் இயக்கும் “3 இடியட்ஸ்” ரீமேக்கில் நடிக்க இலியானா ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இது பற்றி அவர் கூறியது :
சினிமாவுக்கு வந்த புதிதில் நான் நடிக்கும் வேடங்களை பற்றி அதிகம் யோசித்து, மனதை குழப்பிக் கொள்வேன். இப்போது தெளிவடைந்துவிட்டேன். நம்பர் ஒன் பட்டியலில் இடம் பிடித்துவிட்டீர்களா ? என கேட்கிறார்கள். நம்பர் பட்டியலில் என்னை இணைத்துக் கொண்டு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. டாப் பட்டியலில் எனது பங்கு இருந்திருக்கிறது. ஒருமுறை உச்சத்தை தொட்டுவிட்டால் அடுத்து கீழ்நோக்கித்தான் வர வேண்டும். எனவேதான் இது பற்றி நினைப்பதில்லை.
தற்போது “3 இடியட்ஸ்” ரீமேக்கில் நடிக்கவிருக்கிறேன். இப்படத்தை இந்தியில் பார்க்கவில்லை. ஒருமுறைக்கு 2 முறை அப்படத்தை பார்த்துவிட்டு, கரீனா கபூரின் நடிப்பை காப்பி அடிக்க விரும்பவில்லை. இந்த வேடத்தை எனது ஸ்டைலில் நடிப்பேன். இப்படத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக சொல்கிறார்கள். மற்ற நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது எனக்கு தெரியாது. அவர்களுடன் ஒப்பிடவும் விரும்பவில்லை. எனது தகுதிக்கு ஏற்ப சம்பளம் தருகிறார்கள். மற்ற எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றார் இலியானா.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment