
ஒருவழியாக இம்மாதம் 5 ந் தேதி டேராடூனில் படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்தார்கள். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இவர்களுடன் மகேஷ்பாபு, இலியானா ஆகியோரும் கலந்து கொள்வதாகவும் கிட்டதட்ட பதினொரு நாட்கள் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு நடக்கவிருப்பதாகவும் கூறப்பட்டன. எல்லாமே திட்டமிட்டபடிதான் நடந்தது.
நேற்று 300 பேர் கொண்ட படப்பிடிப்பு குழு டேராடூனுக்கு கிளம்பியது. ரயில் ஏறப் போகிற கடைசி நிமிடத்தில் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து போகாதீங்க… என்று வந்தது தடையுத்தரவு. ஏன் என்ற விபரம் தெரியாமலே வீட்டுக்கு திரும்பினார்கள் தொழிலாளர்களும் துணை நடிகர் நடிகைகளும் டெக்னீஷியன்களும்.
நாம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தின. கடைசி நேரத்தில் இப்படத்தில் நடிக்க விரும்ப வில்லையாம் விஜய். ஹேர் ஸ்டைல், அவருக்கு வழங்கப்பட்ட காஸ்ட்யூம் இவைகளில் அதிருப்தி அடைந்தாராம் அவர். வேலாயுதம் படத்தின் ஷ§ட்டிங் இன்னும் மிச்சமிருக்கிறது. இந்த நிலையில் ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொண்டால் கன்ட்டினியூனிடி மிஸ் ஆகும் என்று அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.
0 comments:
Post a Comment