Home » » 3 இடியட்ஸ் சர்ச்சை-விஜய் ஸ்பெஷல் பேட்டி!

3 இடியட்ஸ் சர்ச்சை-விஜய் ஸ்பெஷல் பேட்டி!

இந்தியில் ஹிட்டான “3 இடியட்ஸ்” படம் தமிழில் ரீமேக் ஆகிறது. ஷங்கர் இயக்குகிறார். இதில் விஜய் நாயகனாக நடிப்பதாக செய்திகள் வெளியாயின. “விஜய் முடிவெட்ட வேண்டும், விக் வைக்க வேண்டும் என்றெல்லாம் ஷங்கர்..
வற்புறுத்தியதாகவும் விஜய் மறுத்து விட்டதாகவும்” வதந்திகள் பரவியது. இதனால் ஷங்கருடன் மோதல் ஏற்பட்டு “3 இடியட்ஸ்” படத் தில் இருந்து விஜய் விலகி விட்டதாகவும் கூறப்பட்டது.

இதுபற்றி விஜய்யிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :

“3 இடியட்ஸ்” படத்தில் நான் நடிப்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பாளர் தரப்பில் இருந்துதான் வரவேண்டும். என்னை பொறுத்தவரை நான் பெரிதாக மதிக்கும் இயக்குனர் ஷங்கர். அவர் தமிழ் சினிமாவை புதிய இடத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அவர் படத்தில் நடிக்க விருப்பமாக இருக்கிறேன். ஆனாலும் சில கால்ஷீட் பிரச்சினைகள் உள்ளன.

“காவலன்” படத்துக்கு சர்ச்சைகள் கிளம்பின. பெரிய படங்களுக்கு பிரச்சினைகள் வரத்தான் செய்யும். “காவலன்” படம் இம்மாத இறுதியில் ரிலீசாகிவிடும். காமெடி, காதல், சென்டி மெண்ட் என அனைத்தும் “காவலன்” படத்தில் இருக்கும். மலையாளத்தில் வெளியான “பாடிகார்ட்” ரீமேக்கே இப்படம். கதையில் 75 சதவீதம் மாறுதல் செய்துள்ளோம். “வேலாயுதம்” படம் 50 சதவீதம் முடிந்துள்ளது. 2011 கோடையில் இப்படம் ரிலீசாகும் என்றார் விஜய்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan