ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் வேலாயுதம். இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ஜெனிலியா மற்றும் ஹன்சிகா மோத்வானி நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்.
இந்நிலையில் ‘வேலாயுதம்’ ஷூட்டிங் 50 சதவீதம் முடிந்ததாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தை பற்றி ஜெயம் ராஜா கூறுகையில் “‘வேலாயுதம்’ படத்தில் இருவித கேரக்டரில் நடிக்கிறார் விஜய். விஜய் இருவித கேரக்டர்களையும் மிகவும் சுவாரசியமாக அமைத்துள்ளேன்” என்றார். இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் திரைக்கு வரும் என்று வேலாயுதம் தரப்பில் கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment