Home » » முட்டும் காவலன், காணாமல் போகும் சிறுத்தை

முட்டும் காவலன், காணாமல் போகும் சிறுத்தை


தற்போதைய நிலவரப்படி விஜய்யின் காவலனும், தனுஷின் ஆடுகளமும் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கின்றன. சிறுத்தை மற்றும் இளைஞன் பின்தங்கியுள்ளன. ஜனவரி 14-ம் தேதி தனுஷின் ஆடுகளம் மற்றும் புதிய இயக்குநர் சிவாவின் சிறுத்தை படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களில் ஆடுகளம் முதலிடத்தைப் பெற்றது.

அடுத்த நாள் விஜய்யின் காவலன் மற்றும் பா விஜய்யின் இளைஞன் வெளியாகின. பெரும் எதிர்பார்ப்புகளுடன் வந்த படம் என்பதால் ஓப்பனிங் நன்றாக இருந்தது. திரையிட்ட இடங்களில் ரசிகர் கூட்டம்.

வசூலிலும் கூட மற்ற மூன்று படங்களையும் முந்தியது. இப்போது நான்கைந்து நாள்கள் முடிந்த நிலையில், தனுஷின் ஆடுகளத்துடன் முதலிடத்திற்குப் போட்டா போட்டியில் இறங்கியுள்ளது காவலன். ஆடுகளத்திற்கு வார இறுதிகளில் 90 சதவீதம் நிரம்பிய திரையரங்குகளில் இப்போது 40 முதல் 50 சதவீத பார்வையாளர்கள் உள்ளனர். ஆன்லைனில் எப்போதும் சுலபத்தில் கிடைக்கிறது இந்தப் படத்துக்கான டிக்கெட்.

இப்படி காவலனும், ஆடுகளமும் முதலிடத்திற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த இடத்தில் சிறுத்தை, இளைஞன் உள்ளன. இதில் இளைஞன் படத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் செய்தும் கூட படம் குறித்து சத்தத்தையே காணோம்.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan