நான் நடிகனாக வேண்டுமென ஆசைப்பட்டேன் நான் நினைத்ததை விட பெரிய இடத்தில் மக்கள் என்னை அமர வைத்தனர். இதே போல் மக்கள் என்னை இன்னுமொரு இடத்திலும் அமர வைப்பார்கள் என்று கூறினார் விஜய்.
தமிழகத்தின் பிரபல சஞ்சிகை ஒன்றுக்கு விஜய் வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் மேலும் அரசியலில் இறங்குவதற்கான அஸ்திவாரத்தை பலமாகக் போட்டுக்கொண்டு வருவதாகவும் ஆனால் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர் கடவுள் மட்டுமே என்றும் விஜய் கருத்து தெரிவித்தார்.
காவலன் திரைப்படத்தை பற்றி அவர் கூறுகையில் 'காவலன்' படம் ரிலீஸ் ஆகக் கூடாதுன்னு சிலர் கங்கணம் கட்டிக்கிட்டுத் தெளிவாகத் திட்டம் போடுறதைப் புரிஞ்சுக்கிட்டேன். பல தரப்புகளில் இருந்து 'காவலன்' படத் துக்குப் பெரிய பிரஷர் கொடுத்தாங்க. அதில் சிலர்... தீபாவளி, பொங்கல்னு பண்டிகை தினங்களில், அரசு விடுமுறை நாட்களில் வரிசையா என் படங்களை ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கிறது மட்டும் எந்த வகையில் நியாயம்? வேடிக்கை என்னன்னா, என் முகத்தை அழிக்க என் முகமேதான் தேவைப்படுவது!
சரித்திரத்துல ஒரு சம்பவம் வரும். நம்முடைய மகாத்மா காந்திக்கு ஏற்பட்ட அனுபவம் அது. தென் ஆப்பிரிக்காவில் ரயிலில் பயணம் போன மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, வெள்ளைக்காரன் ஒருவன் 'ப்ளாக் டாக்'னு கூச்சலிட்டு எட்டி உதைப்பான். சாதாரண மோகன்தாஸாக விழுந்த அவர், மகாத்மா காந்தியாக அந்த பிளாட்ஃபார்ம்லதான் பிறந்தார்!
தி.மு.க பொருளாளர் பதவியில் இருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை, ஒரு கேள்வி கேட்டார்னு கோபப்பட்டுத் தூக்கி எறிஞ்சாங்க. அன்னிக்குத்தான் அவர் புரட்சித் தலைவர் ஆனார். அவர் இறக்கும் வரை அசைக்க முடியாத முதலமைச்சராக இருந்தார்.
எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வண்டியில் இருந்து ஜெயலலிதா மேடத்தைக் கீழே தள்ளி னாங்க. பின்னாளில் சைரன் காரில் போலீஸ் புடைசூழ சி.எம் ஆனாங்க, அதே ஜெயலலிதா மேடம். ரெண்டு தடவை சி.எம்மா இருந்தாங்க. இதோ... இப்பவும் பொறி பறக்குது.
அதே மாதிரிதான்... சும்மா இருந்த கேப்டனின் கல்யாண மண்டபத்தை இடிச்சாங்க. அவர் இப்போ எவ்ளோ பெரிய ஃபோர்ஸா இருக்கார்னு எல்லோருக்கும் தெரியும்.
முதல்ல எம்.ஜிஆர், அடுத்து ஜெயலலிதா மேடம், அப்புறம் கேப்டன்... அவங்களை மாதிரியேதான் அடுத்து இப்போ எனக்கும் நடக்குதா?'' எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.
''சென்னை குரோம்பேட்டையில் இருக்கிற வெற்றி தியேட்டரில் என்னுடைய 'காவலன்' ரிலீஸ் ஆனது. அங்கு ஆளுங்கட்சிக்காரங்க வந்து நின்னு, 'விஜய் படத்தை ரிலீஸ் பண்ணாதே... பேனரைக் கட்டாதே... வெளியில போன்னு மிரட்டி அதிகாரம் பண்ணி இருக்காங்க. ரசிகர்களிடம், 'பொறுமையா இருங்கன்னு சமாதானப்படுத்தி வெச்சேன். என்றும் கூறினார் விஜய்.
source- Anandavikadan

0 comments:
Post a Comment