கொலிவுட்டில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த நண்பன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கமல் ஹாசனுக்காக இளையதளபதி விஜய் நண்பன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
நண்பன் திரைப்படத்தை கமல் ஹாசன் பார்த்து விட்டு விஜய்யை புகழ்ந்துள்ளார். விஜய்யின் மற்ற திரைப்படங்களை விட நண்பன் பொழுதுபோக்கான திரைப்படமாக அமைந்துள்ளது.
விஜய்யை எதார்த்தமாக பார்க்கும் சூழல் நண்பன் திரைப்படத்தில் ஏற்பட்டது. ஜீவாவும், ஸ்ரீகாந்தும் நண்பனில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்று கமல் ஹாசன் பாராட்டியுள்ளார்.
இதற்கு முன்பு போக்கிரி படத்தை பார்த்து விஜய்யை கமல் பாராட்டியுள்ளார். அண்மையில் நடந்த கமல் ஹாசன் பிறந்த நாள் விழாவில் கமலுடன் விஜய் ஆடி பிறந்தநாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.





0 comments:
Post a Comment