சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட்டான அண்ணாமலை படத்தின் ரீமேக்கில் இளைய தளபதி விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு ரஜினிகாந்த், குஷ்பு, சரத்பாபு, நடித்து வெளிவந்த படம் அண்ணாமலை.
இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, தேவா இசையமைத்திருந்தார்.
குறைந்த செலவில் எடுக்கப்பட்ட அண்ணாமலை, 4 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக ஈட்டியது.
இந்நிலையில் தற்போது அண்ணாமலை ரீமேக் ஆகவுள்ளதாகவும் அதில் விஜய், ஹன்சிகா நடிப்பதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் இதுகுறித்த செய்தியை விஜய், ஹன்சிகா இருவருமே மறுத்துள்ளனர். அண்மையில் விஜய்யின் நண்பன் பட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யிடம் நீங்கள் ரஜினி ரசிகர். அவரின் எந்த படம் ரீமேக் பண்ணினால் நீங்கள் நடிக்க ஒப்புக்கொள்வீர்கள் என கேட்க, அதற்கு இளையதளபதி தான் அண்ணாமலை படம் பலதடவை பார்த்திருக்கிறேன் எனவும் அந்தப்படம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் அண்ணாமலை ரீமேக் பண்ணினால் அதில் நான் நடிப்பேன் எனவும் தனது கருத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இவ்வாறு கூறியதைஅடுத்து இதை உண்மைத்தகவல் என்று நினைத்து பலர் வதந்திகளை பரப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment