இளைய தளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் தலைப்பில் புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசனின் உதவியாளரான ரவிதேவன் என்பவர் கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் படமொன்றை தொடங்கினார்.
இருப்பினும் இப்படம் வெகுதிகதிகளாக படப்பிடிப்பிலேயே இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்திற்கான First Look சமீபத்தில் வெளிவந்தது. இதைப்பார்த்த கள்ளத்துப்பாக்கி குழுவினர் அதிர்ச்சியுற்றுனர்.
மேலும் சென்னையில் இந்த இரு படத்திற்கான போஸ்டர்கள் ஒரே சுவற்றில் ஒட்டப்பட்டதும் கள்ளத்துப்பாக்கி குழுவினரையும் துப்பாக்கி குழுவினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்யப்போனால், அங்கே இளைய தளபதியின் அப்பா சந்திரசேகரன் தலைராக உள்ளார். அவர் இதை கண்டுகொள்ள வில்லை என்று ரவிதேவன் குழுவினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ரவிதேவன், துப்பாக்கி பட போஸ்டர்கள் வெளிவந்ததிலிருந்து எங்கள் படத்திற்கு பிரச்சினை தொடங்கியுள்ளது.
எங்கள் பட போஸ்டர்களின் மீது துப்பாக்கி பட போஸ்டர்களை ஒட்டி மறைக்கின்றனர். மே 1ம் திகதி நாங்கள் ஒட்ட திட்டமிட்டிருந்தும் அதை சதி செய்து தடுத்து விட்டனர்.
தொடக்கத்தில் விஜய் படத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. தற்போது எங்களுக்கு பிரச்சினைகள் வந்திருப்பதால் விஜய் படத்திற்கான தலைப்பை மாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment