Home » » பாலிவுட் படத்தில் நடனமாடும் இளைய தளபதி விஜய்

பாலிவுட் படத்தில் நடனமாடும் இளைய தளபதி விஜய்

பிரபுதேவா இயக்கி வருகின்ற ரவுடி ரத்தோர் பாலிவுட் படத்தில் விஜய் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகின்றார். 


கடந்த 2006ம் ஆண்டு தெலுங்கில் “விக்ரமுடு” என்ற படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தை கொலிவுட்டில் சிறுத்தை என்ற பெயரில் ரீமேக் செய்து அதில் கார்த்தி இரு வேடங்களில் நடித்தார். கொலிவுட்டிலும் இப்படம் சூப்பர் ஹிட் ஆனதையடுத்து கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 

தற்போது பாலிவுட்டில் ரவுடி ரத்தோர் என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. ரவுடி ரத்தோரில் அக்ஷய் குமார் கதாநாயகனாகவும் சோனாக்ஷி சின்ஹா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இந்நிலையில் ரவுடி ரத்தோர் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் இளையதளபதி விஜய் நடனம் ஆட இருக்கிறார். இதுகுறித்து பிரபுதேவா, நான் இயக்கும் ரவுடி ரத்தோரில் விஜய் நடனம் ஆட சம்மதித்திருக்கிறார் என்று கூறியுள்ளார். ரவுடி ரத்தோர் படத்தின் பாடலில் ஆடுவதன் மூலம், முதல் முறையாக விஜய் இந்திக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan