Home » » யோஹனில் இளையதளபதிக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை

யோஹனில் இளையதளபதிக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை

முதன்முதலாக கௌதம் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கிறார். யோஹன் அத்தியாயம் ஒன்று என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சர்வதேச முகவராக நடிக்கிறார்.


இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படம் குறித்து கெளதம் மேனன் கூறியதாவது, எனக்கு விஜய்யோடு முதல் சந்திப்பு சரியாக அமையவில்லை.
நானும் அவரை வைத்து படம் பண்ண ரொம்ப ஆர்வமாக இருந்தேன். இதன் விளைவே யோஹன் அத்தியாயம் ஒன்று உருவானது. இப்படத்தின் கதாபாத்திரங்கள் விஜய்க்கு புதியது. இப்படம் விஜய்க்கு புதிய வெற்றிப்பாதையை உருவாக்கித்தரும் என்றார்.

தற்போது யோஹன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகையை நடிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதற்குண்டான பணிகளில் கவுதம் மேனன் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Share this article :

0 comments:

 
Copyright © 2011. VIJAY 360º - All Rights Reserved Tamil superstar Vijay
Website registered by Sujan SVS~ Diehard Vijay Fan